நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணியின் சார்பில் 170 தொகுதிகளில் போட்டியிடுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தால் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள "கேமரா" சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 64 தொகுதிகளில் தமிழர் வாழ்வுரிமை கூட்டணியின் ஆதரவைக் கோரிய அரசியல் கட்சிகளை ஆதரிப்பது என முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.