சி.வி.சண்முகம் பதவிவிலகியதால் காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இடத்தை வழங்குவதாக த.வெ.க. அறிவித்துள்ளது.
இந்த மாதம் 18ஆம் தேதி அந்த இடத்துக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
அதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளதால் த.வெ.க. வெற்றிபெறும் வாய்ப்பே உள்ளது.
இந்த நிலையில், இந்த இடத்தைத் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் த.வெ.க. தலைவர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, விஜய் வெளியிட்ட அறிக்கையில், த.வெ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த இடம் ஒதுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.