தமிழ் நாடு

த.வெ.க. 3ஆம் ஆண்டு- மேடையில் ஆடிய விஜய்!

Staff Writer

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தி மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, அக்கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள பனையூரில் இன்று காலைமுதல் நடைபெற்றுவருகிறது.

முன்னதாக, இதில் விஜய்க்கு வரவேற்பு கொடுப்பதற்காக புஸ்ஸி ஆனந்த் உட்பட தலைமைக்கழக நிர்வாகிகள் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்தும் விஜயின் கார் நிற்காமல் சென்றுகொண்டே இருந்தது. அதனால் த.வெ.க நிர்வாகிகள் விஜய்யின் கார் பின்னாலேயே ஓடினார்கள். மூத்தவரான புஸ்ஸி ஆனந்த்தும் அவர்களுக்குச் சளைக்காமல் ஓடினார்.

பின்னர், அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் விஜய் கலந்துகொண்டார். மேடைப் பாடகர் வேல்முருகனின் பாடல் நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. அப்போது பாடல்களை ரசித்துக்கேட்ட விஜய், ஒரு கட்டத்தில் மேடைக்குச் சென்று தானும் நடனம் ஆடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.

முன்னதாக, நடைபெற்ற நிகழ்வில் சீமான் கட்சியினரைப் போல கையை முன்னால்நீட்டி த.வெ.க.வினர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.