பெண் போலீசிடம் அத்துமீறிய த.வெ.க. நிர்வாகி 
தமிழ் நாடு

பெண் போலீசிடம் அத்துமீறல்- த.வெ.க. நிர்வாகி மீது வழக்கு!

Staff Writer

தெய்வீக நிகழ்ச்சி ஒன்றில் பெண் போலீசிடம் அத்துமீறலில் ஈடுபட்ட விஜய் தலைமையிலான த.வெ.க. நிர்வாகி ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

சென்னையில் சில நாள்களாக திருப்பதி கோயிலுக்கான குடை ஊர்வலம், பல பகுதிகளில் கடந்த ஆண்டைவிட அதிவிமர்சையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பு அமைப்பான வி.எச்.பி.யின் சார்பில் தலைநகரில் ஏராளமான இடங்களில் குடை ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அயனாவரம் பகுதியில் நடைபெற்ற குடை ஊர்வலத்துக்காக கூடுதலான போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, வில்லிவாக்கம் கிழக்கு பகுதி விஜய்யின் த.வெ.க. கட்சியைச் சேர்ந்த மதன்ராஜ் உட்பட மூன்று பேர் அங்கிருந்த பெண் காவலரிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டனர்.

அதைப் பார்த்த சக காவலர்கள் அவர்கள் மூவரையும் பிடித்துச்சென்றனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.