தமிழ் நாடு

எடப்பாடியில் த.வெ.க. மனு நிராகரிப்பு!

Staff Writer

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் த.வெ.க. வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

எடப்பாடியில் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியை எதிர்த்து த.வெ.க. சார்பில் அருண்குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது மனுவைப் பரிசீலனை செய்ததில் மனுவில் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.

திருத்தம் செய்யவேண்டிய ஆவணங்களைக் கொண்டுவருவதாகக் கூறிச் சென்ற அருண்குமார், திரும்பி வரவில்லை. இதனிடையே அவரைக் காணவில்லை என கட்சிக்காரர்கள் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேட்பாளர் அருண்குமார் உரிய நேரத்திற்குள் வராததால், அவரின் மனுவை நிராகரிப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் அறிவித்தார்.

அவருக்கு மாற்றாக தாக்கல்செய்யப்பட்ட நித்யாவின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.