துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
தமிழ் நாடு

மற்றொரு நாள், மற்றொரு எம்.எல்.ஏ.- உதயநிதி விமர்சனம்!

Staff Writer

அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் கரூர் விஜயபாஸ்கர் இன்று பதவிவிலகிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “மற்றொரு நாள்; மற்றுமொரு ராஜினாமா” என்று விமர்சனம் செய்துள்ளார்.

”இந்த ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு தீவிரம் ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் எம்.எல்.ஏ.-கள் வாங்குவதைத் தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.

“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று வசனப்படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த காட்சியில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?

அரசின் இந்த வாசிங் மெசின் அரசியலை தமிழ்நாடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று உதயநிதியின் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.