உதயநிதி 
தமிழ் நாடு

கோவை மாணவர் கொலை- விளக்கம் கேட்ட உதயநிதி

Staff Writer

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் அமைச்சர்கள் இன்று பதிலுரை ஆற்றினர்.

மேலும், தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, அவசரப் பிரச்னை ஒன்றை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, "கோவையில் போதைப்பொருள் விற்பனை பற்றி போலீசில் தகவல் அளித்த மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்; உரிய விளக்கம் கொடுக்க வேண்டும்." என கவன ஈர்ப்புத் தீர்மானம் அளித்தார்.

இதைப் பற்றி திங்கட்கிழமை அன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று பேரவைத் தலைவர் பிரபாகர் கூறினார்.

ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து, "சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு இடையே ஏற்கனவே கோஷ்டி மோதல் காரணமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது." என்று விளக்கம் அளிக்கத் தொடங்கினார்.

அதற்கு பேரவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அவரை திங்களன்று பதில் அளிக்குமாறு பிரபாகர் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram