துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
தமிழ் நாடு

தொகுதி மாற்றமா?- உதயநிதி சொன்ன பதில்

Staff Writer

துணைமுதலமைச்சர் உதயநிதி இந்தத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியை விட்டுவிட்டு திருவாரூர் தொகுதிக்கு மாறுவதாகக் கூறப்படுகிறது. திருவாரூர் பகுதியில் அவர் அடிக்கடி நிகழ்வுகளில் பங்கேற்பதும் இதன் பின்னணியில் பேசப்படுகிறது. 

இந்த நிலையில், தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஒருவர், ஆயிரம்விளக்கு தொகுதியில்தான் போட்டியிடுகிறீர்களா அல்லது வேறு தொகுதியா என்று கேட்டார். 

செய்தியாளரின் தவறை உணர்ந்த அவர், சட்டென அதைத் திருத்தி, நான் ஆயிரம்விளக்கு தொகுதி கிடையாது, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி என்றார். 

தொடர்ந்து பதில் கூறியவர், மக்கள் எனச் சொன்னவர், பின்னர், உடனே சுதாரித்துக்கொண்டு, கட்சியின் தலைவர்  என்ன முடிவெடுக்கிறாரே அதன்படிதான் போட்டியிடுவேன் என்று உதயநிதி கூறினார்.