சட்டப்பேரவையில் மேகதாது தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் பேசினார். 
தமிழ் நாடு

மேகதாது அணை- விஜய் தீர்மானத்தில் உதயநிதி குறிப்பும் சேர்ப்பு!

Staff Writer

காவிரியில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை அனுமதிக்கக்கூடாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று தீர்மானம் கொண்டுவந்தார். அதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பேசினர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகையில், இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட நதிநீர் தாவா சட்டப்படி தனி நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்று முன்னைய தி.மு.க. ஆட்சியில் வலியுறுத்தப்பட்டது. அதையும் இந்தத் தீர்மானத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், இது தொடர்பாக தன்னுடைய அரசாங்கம் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாகவும் ஆனாலும் உதயநிதியின் குறிப்பையும் தீர்மானத்தின் நான்காவது பகுதியாகச் சேர்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

பின்னர், தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.