அல் உம்மா பாஷா 
தமிழ் நாடு

அல் உம்மா தலைவர் பாஷா காலமானார்!

Staff Writer

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா இன்று காலமானார். 

அமைதியான தொழில் நகராக இருந்துவந்த கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அந்த விவகாரத்தில் அல் உம்மா இயக்கத்தவரே ஈடுபட்டனர் என்று அரசுத் தரப்பு குற்றம் சாட்டி, அதன் தலைவர் எஸ்.ஏ. பாஷா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைதுசெய்தது. 

அவர்கள் மீது தடா சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டது. 

அதில் அவர்கள் நீண்ட காலம் விசாரணைச் சிறைவாசிகளாக இருந்தனர். 

ஒருவழியாக தீர்ப்பு அளிக்கப்பட்டதில் பாஷா உட்பட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

84 வயதான பாஷாவுக்கு அண்மையில் இடைக்கால விடுப்பில் வெளியே வந்தார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று தன் வீட்டில் உயிரிழந்தார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram