அதிமுக முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் இன்று காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வைத்தியலிங்கம் இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்தது குறிப்பிட்டத்தக்கது.