வைகோ 
தமிழ் நாடு

அவரு அமைச்சர்னு தெரியாது, நீ யாருய்யா?- வைகோ டென்ஷன்

Staff Writer

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொதுவெளியில் கண்டபடி நடந்துகொண்டு விமரசனத்துக்கு உள்ளாகியுள்ளார். 

அண்மைக் காலமாக, அவரும் அவர் மகனும் பொது இடங்களில் மற்ற கட்சிகளின் தலைவர்கள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், சென்னையில் நேற்று வி.எஸ்.பாபு இறுதி நிகழ்வில் முதலமைச்சர் விஜய்யுடன் நடந்துசென்ற வைகோவை, அமைச்சர் விஜய் பார்த்திபன் தொட்டு நிறுத்தினார். 

சட்டெனக் கோபமான வைகோ, அவரிடம் ஏதோ சொல்ல விஜய் அவரைச் சமாதானம் செய்த காட்சிகள் நேற்று பரவலாகின. 

அதைப் பற்றி சென்னையில் இன்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”நான் விஜய்க்கு பாதுகாப்பாகப் போய்க்கொண்டிருந்தபோது ஒருவர், பின்னால் வரும்படி சொன்னார். உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ என்று நான் சொன்னேன். அவர் அமைச்சரா என்று தெரியாது.” என்று வைகோ பதில் அளித்தார். 

அப்போது, அவர் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை ஒருமையில் குறிப்பிட்டார். அதைப் பற்றிச் சுட்டிக்காட்டியதும் மேலும் கோபமாக தி.மு.க. தொடர்புடையவர் என அந்தச் செய்தியாளரை அவர் திட்டினார். 

இந்தக் காணொலி சமூக ஊடகங்களில் அவரைப் பற்றிய கிண்டலுடன் பரவலாகிவருகிறது.