முதலமைச்சராக ஆவாரா மாட்டாரா விஜய் என இழுபறி நீடித்துக்கொண்டிருந்த நிலையில், த.வெ.க. ஆட்சி அமைக்க வி.சி.க. ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான போதுமான பெரும்பான்மை கிடைத்துள்ளது.
விமானநிலையம் அருகில் உள்ள ரேடிசன் புளூ ஓட்டலில் தங்கியிருந்த திருமாவளவனை, த.வெ.க. தேர்தல் மேலாண்மை இணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா இன்று மாலையில் சந்தித்துப் பேசினார். பின்னர், வெளியே வந்த ஆதவ், எங்களின் தலைவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்; ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்; ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கு நன்றி என்று கூறினார்.