தமிழ் நாடு

அமைச்சரவையில் சேர்கிறதா வி.சி.க.?- தடுமாறும் திருமா!

Staff Writer

விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் வி.சி.க.வும் சேரவேண்டும் என த.வெ.க. தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னணி நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் மீண்டும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். 

சென்னை, அயோத்திதாசர் மணிமண்டபத்தில் இன்று காலையில் மலர் மரியாதை செலுத்தியபின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார், திருமா.

அப்போது, “அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கடந்த வாரம் எங்கள் வேளச்சேரி அலுவலகத்துக்கு முதலமைச்சர் விஜய் வந்தபோதும் இதை வலியுறுத்தியிருந்தார். எனவே, இதைப் பற்றி எங்கள் கட்சியினர் கேட்பார்கள்... இதனால் இதுகுறித்து முன்னணி நிர்வாகிகளிடம் பேசி முடிவுசெய்யப்படும்.” என்று திருமா கூறினார்.

பின்னர், வி.சி.க.வின் தலைமையகத்தில் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் அமைச்சரவையில் அ.தி.மு.க.வின் அதிருப்தி அணியினர் இடம்பெற மாட்டார்கள் என்று தெரிவித்தார்.