தமிழ் நாடு

அமைச்சர்கள் ரீல்ஸ் போடுவது நாடளவில் சகஜம் ஆகிவிட்டது- திருமா

Staff Writer

அமைச்சர்கள் தாங்கள் ஆய்வுசெய்வது போன்ற நிகழ்வுகளை ரீல்ஸ் வடிவத்தில் வெளியிடுவது நாடு முழுவதும் இயல்பாகிவிட்டது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தன்னுடைய சிவகாசி தொகுதியில் அரசுப் பள்ளிக் குழந்தை மனச்சங்கடம் உண்டாகும்படி கேள்வி கேட்டதை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகிறார்கள். கூட்டணியில் இருக்கும் வி.சி.க.வின் கருத்தைப் பற்றி அக்கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் இன்று காலையில் சென்னையில் செய்தியாளர்கள் கேட்டனர். 

அதற்கு அவர், அந்தக் காணொலியை தான் பார்க்கவே இல்லை என்றார். 

மேலும், அமைச்சர்கள் இந்தியா முழுவதும் தாங்கள் செல்கின்ற நிகழ்ச்சிகளைப் பற்றி சமூக ஊடகங்களில் பதிவிடுவது இயல்பாகிவிட்டது என்றும் அதில் பொதுநலன் பாதிப்பு ஏற்பட்டால் சுட்டிக்காட்டலாம்; அமைச்சர்கள் அதைச் சரிசெய்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். 

சொல்லப்படும் சம்பவம் குறித்து அமைச்சரே பதில்கூறுவது பொருத்தமாக இருக்கும் என்றும் திருமா சொன்னார்.