விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்த முகமது யூசுப் மறைந்ததை அடுத்து, அந்தப் பதவி நிரப்பப்படாமலேயே இருந்தது.
இப்போது அவருக்குப் பதிலாக திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதைப்போல, நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்த நிலையில், அவருக்கு கட்சியின் முதன்மைச் செயலாளர் எனும் புதுப்பதவி வழங்கப்பட்டுள்ளது.