முதலமைச்சர் விஜய் முன்னிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டு - செயலாக்க மாநாடு நடைபெற்றது.
இதில் ரூ. 58,214 கோடி முதலீடு, 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு, 19,965 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
ரூ. 1,430 கோடி முதலீடு, 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
ஐந்து நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.