முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

டீ கடை, டிராக்டர்... மதுராந்தகத்தில் உத்தியை மாற்றிய விஜய்!

Staff Writer

மதுராந்தகத்தில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இரண்டாவது முறையாக இன்று வாக்கு சேகரித்து வருகிறார்.

வரும் 6ஆம் தேதி, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 4ஆம் தேதியுடன், பிரச்சாரம் முடிவடைகிறது.

பல்வேறு கட்சித் தலைவர்களும் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி மதுராந்தகம் தொகுதியில் மேடைப் பேச்சாற்றிய முதல்வர் விஜய், இன்று இரண்டாவது முறையாக சாலை வலம் மேற்கொண்டு மதுராந்தகத்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

முன்னதாக, மதுராந்தகம் எல்.எண்டத்தூர் சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய முதல்வர் விஜய், அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர், மதுராந்தம் பகுதியில் ஒரு வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டி விவசாயிகளைக் கவர்வதில் ஈடுபட்டார்.

கடந்த பொதுத்தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளுக்குப் பிரச்சாரத்துக்கே செல்லாமல், த.வெ.க.வுக்கு தனிப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தார், விஜய். ஆனால் இடைத்தேர்தலில் இரண்டாவது முறையாகவும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக வழக்கமான பாணியைக் கைவிட்டு திடீர் திடீர் காட்சிகளை அவர் ஏற்படுத்துவது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram