த.வெ.க. தலைவர் விஜய் மீண்டும் இன்று சென்னையில் பிரச்சாரம் செய்கிறார்.
மாலை 4 மணி முதல் 5 மணிவரை தியாகராயர் நகரிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை எழும்பூரிலும் அவர் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
தி.நகர் பிரச்சாரத்துக்கு இருபத்தி ஏழு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதைப்போல, எழும்பூர் பிரச்சாரத்துக்கு இருபது நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த மார்ச் கடைசி வாரத்தில் சென்னையில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, காவல்துறை ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறி, கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் சரியாகப் பிரச்சாரம் செய்யவில்லை. பின்னர் இந்த மாதத் தொடக்கத்தில் அனுமதி கிடைத்தும் அவர் பிரச்சாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.