தமிழ் நாடு

ஒரே நாளில் வாகன வரிசை விபத்துகள்- கண்டுகொள்ளாத விஜய்!

Staff Writer

த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார வாகன வரிசையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை விபத்துகள் ஏற்பட்டன. ஆனாலும் அதைப் பொருட்டாகக் கருதாமல் விஜய்யின் வாகனம் முன்னே சென்றபடி இருந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்று காலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தனி விமானம் மூலம் சென்றார், விஜய். அங்கிருந்து சாலை வழியாக நெல்லையில் பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாளையங்கோட்டைக்கு சாலைவழியாகச் சென்றார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்துக்கு அருகில் விஜய்யின் வாகன வரிசையில் பின்தொடர்ந்து வந்த இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள், தாறுமாறாக வண்டியை ஓட்டினர். அதில் ஒரு வண்டி சறுக்கி விழுந்ததும் அடுத்தடுத்து வந்த வண்டிகள் மோதி விழுந்தன. ஆனால் விஜய்யின் வாகனம் இதையொட்டி நிறுத்தப்படவில்லை.

இதைப்போல மாலையில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் விஜய் சாலை உலா சென்றார். அப்போது, அங்கும் இருசக்கர வாகனங்கள் மோதி விழுந்தன. காலையில் நடந்ததைப் போலவே விஜய்யின் வாகன வரிசையில் சென்றவர்கள் இதைக் கண்டுகொள்ளாமல் முன்னே போய்க்கொண்டிருந்தனர்.