கரூர் சம்பவத்தால் இதயம் நொறுங்கிப் போயிருப்பதாக விஜய் கூறியுள்ளார்.
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். ஏராளமானோர் காலமடைந்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமாலை ஏழுமணிக்கு மேல் விஜய் கரூர் வந்தடைந்தபோதே கூட்டம் ததும்பிக்கொண்டிருந்தது. வழக்கம்போல் அவர் பேச்சை ஆரம்பித்தபோதே நெரிசலில் சிக்கியவர்களுக்காக அவரே தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்ததையும் ஆம்புலன்ஸ் அழைக்குமாறு கூறியதையும் பார்க்க முடிந்தது.
இதையடுத்து நிலமை மோசமாகி பலர் இறந்த நிலையில் விஜய் திருச்சியில் விமான ஏறி நள்ளிரவில் சென்னை திரும்பினார். செய்தியாளர்களிடமும் கருத்துக் கூறவில்லை.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பின் வரும் இரங்கலை மட்டும் வெளியிட்டுள்ளார். இதயம் நொறுங்கிப்போய் தாங்க முடியாத வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்றுகொண்டிருப்பதாகக் கூறி உள்ளார்.