அண்ணன் செங்கோட்டையனின் அரசியல் அனுபவமும் களப்பணியும் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்தார்.
வீடியோ வெளியிட்டு அவரை வரவேற்ற விஜய் கூறியுள்ளதாவது: “20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்.ஜி.ஆர். மன்றத்தில் சேர்ந்தவர். அந்த வயதிலேயே சட்டமன்ற உறுப்பினர் என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அவரின் பயணத்தில், அதிமுகவின் இருபெரும் தலைவர்களின் பெரிய நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்துள்ளார். அவரின் அரசியல் அனுபவமும் அவரின் களப்பணியும் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும். அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும், நல்லது மட்டுமே நடக்கும். வெற்றி நிச்சயம்.” என்று பேசியுள்ளார்.