முதலமைச்சர் விஜய், அவரின் மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா சார்பில் கடந்த டிசம்பரில் விவாக ரத்து வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் மீதான விசாரணையில், பாதுகாப்பு, புகழ்முகங்கள் ஆகிய காரணங்களுக்காக காணொலிமூலமாக விசாரணையில் பங்கேற்க அனுமதி கோரி இரு தரப்புகளும் மனு தாக்கல்செய்திருந்தன.
இந்நிலையில் இன்று ஜூன் 15 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருவருமே நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை. அவர்களின் வழக்குரைஞர்கள் மட்டுமே முன்னிலையாகினா்.
அப்போது, அவர்களின் மின்னஞ்சல் விவரங்களைத் தாக்கல்செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அடுத்த விசாரணை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.