நடிகர் விஜய்யின் மனைவின் சங்கீதா தாக்கல்செய்துள்ள விவாகரத்து வழக்கு வரும் ஏப்ரல் 20ஆம்தேதி அன்று விசாரணைக்கு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் அவர் இந்த வழக்கைத் தாக்கல்செய்துள்ளார்.
கடந்த டிசம்பரில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு விவரம், திடீரென நேற்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பகிரப்பட்டது.
மனுவில், இந்தப் பிரச்னையை தனிப்பட்ட வகையில் தீர்த்துக்கொள்ள முயன்றதாகவும் பரஸ்பரம் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்ட பிறகும் விஜய் தரப்பில் தீர்வுக்கு வரவில்லை என்றும் அதன் தொடர்ச்சியாகவே நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் சமூக நிலையை அடிப்படையாக வைத்து தனக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
பிரச்னைக்கு முக்கிய காரணமாக, விஜய் மணம்மீறிய உறவில் ஒரு நடிகையுடன் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள சங்கீதா, தேவைப்பட்டால் அவரையும் இவ்வழக்கில் சேர்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.