தமிழ் நாடு

செய்தியாளர்களைத் தாக்கிய விஜய்யின் ஆட்கள்!

Staff Writer

காரைக்குடி பிரச்சாரத்துக்காக இன்று சென்னையிலிருந்து சென்ற த.வெ.க. தலைவர் விஜய், திருச்சி விமான நிலையம் வழியாகத் திரும்பினார்.

அப்போது, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் ஜனநாயகன் படம் முதலிய சிலவற்றைப் பற்றி கேள்வி எழுப்பினர். அவர்களைக் கண்டும்காணாதது போல விஜய் காதில் வாங்காதபடி சென்றுகொண்டிருந்தார். 

செய்தியாளர்களும் விடாமல் அவரிடம் கருத்தைப் பெற முயன்றனர். அப்போது, விஜய்யுடன் வந்த தடியான ஆட்கள் மூத்த செய்தியாளர் ஒருவரை கையைவைத்து நெட்டித் தள்ளிவிட்டார். 

இதனால் விஜய்யின் ஆட்களுக்கும் செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானதும், காவல்துறையினர் அந்தக் குறிப்பிட்ட பாதுகாவல் ஆளை பத்திரமாக அழைத்துச்சென்று ஒரு காரில் அமர வைத்தனர். 

முன்னதாக, காரைக்குடி பயணத்தின்போது விஜய்யின் வாகனத்தில் தொற்றிக்கொள்ள முயன்ற த.வெ.க. தொண்டர்களை மேலே இருந்த தடி ஆள் தன்னுடைய காலணியால் மிதித்து தள்ளிவிட்ட காட்சி ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.