த.வெ.க.தலைவர் விஜய் இன்று சென்னையில் சில இடங்களில் பிரச்சாரம் செய்வதாக முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று மதியம் 12 முதல் ஒரு மணிவரையிலும் வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு காவல்துறையினரும் ஒப்புதல் அளித்திருந்தனர்.
ஆனால், திட்டப்படி அவர் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.
இதைப்போல, தியாகராயர் நகரில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணிவரை பிரச்சாரம் செய்யவும் விஜய் தரப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் பிரச்சாரத்தை முடிக்க முடியாது என த.வெ.க. தரப்பு திடீரென பிரச்சாரத்தை இரத்து செய்துவிட்டது.
விஜய்யின் பிரச்சாரத்தை எதிர்பார்த்து காத்திருந்த த.வெ.க. தொண்டர்கள் இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஏற்கெனவே, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனாவை ஆதரித்து விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்து, ஆளும் கட்சியினர் மீதும் அரசு மீதும் குற்றம்சாட்டி அதை நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.