விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் 
தமிழ் நாடு

விஜய் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்!

Staff Writer

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க.வில் சேர்ந்தார். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அவர் வந்த வேகத்தில் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத காரணத்தால் விலகுவதாக அவர் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

சூழ்ச்சிகளால் தான் வேட்பாளராக வரமுடியாமல் போய்விட்டது என்று அவர் கூறினார்.

மாவட்டத்தில் கலப்பை மக்கள் இயக்கம் என்பதன் மூலம் சேவையாற்றுவதைத் தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

”அது ஒரு பெரிய கட்சி... கட்டமைப்பு... தி.மு.க.வில் நடக்கவே முடியாத அளவுக்கு இரண்டுமூன்று பேர் கைப்பிடித்து கூட்டிக்கொண்டு போகும் துரைமுருகன், அன்பில் மகேஸ் போன்ற வாரிசு... பலரும் இப்படி ஜமீனுக்கு அடுத்து ஜமீன் வருவதைப் போல... கதவு திறக்கப்படாமல் இருக்கிறது. புதியவர்களை வாங்க வாங்க என்கிறார்கள். அது இரும்புக்கோட்டை போல இருக்கிறது.” என்றும் அவர் கூறினார்.