சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறுவோம் என திமுக தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது: “நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொன்னோம். ஆனால் அதற்கும் மேலாக வெற்றி பெறுவோம். நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு 200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
நம்ம கொளத்தூர். நம்ம ஸ்டாலின் என கொளத்தூர் தொகுதியில் நான் மேற்கொண்ட பணிகள், இனிமேல் செய்ய வேண்டிய பணிகள் குறித்து புத்தம் அளித்திருக்கிறேன்.
திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாங்கள் அமோகமாக வெற்றி பெறுவோம்.
4ஆவது முறையும் கொளத்தூர் தொகுதி வாக்களர்கள் திமுக வேட்பாளராகிய என்னை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள். எப்போதும் போல எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் எங்கள் கூட்டணிக்கே சாதகமாக இருக்கும்.” என்றார்.