தமிழ் நாடு

விசிலுக்கு தமிழில் என்ன சொல்லலாம்…?

Staff Writer

விஜய்யின் தவெகாவுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ள நிலையில், விசில் என்பதற்கு தமிழில் ‘ஊதல்’ என்று பெயர் என கவிஞர் மகுடேசுவரன் கூறியுள்ளார்.

கவிஞர் மகுடேசுவரன் உருவாக்கும் தனித் தமிழ்ச் சொற்கள் சில நேரங்களில் கவனிக்கவும் வைக்கவும் சில நேரங்களில் சலசலப்பையும் ஏற்படுத்திவிடும். அப்படியொரு சலசலப்பை ஏற்படுத்திய வார்த்தை நடிகை நயன்தாராவை ’உடுகண்ணி’ என்று தமிழ்ப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த வார்த்தையை தமிழ்ப்படுத்தியுள்ள கவிஞர் மகுடேசுவரன், விசில் என்பதற்கு தமிழில் ‘ஊதல்’ என்று பெயர் என தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.