தமிழ் நாடு

அஜித் அப்படிச் சொன்னாரா?- மேலாளர் விளக்கம்

Staff Writer

நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார் சென்னை திருவான்மியூர் பகுதியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர், மாற்றம் தேவையில்லை எனக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. 

அப்படியான தகவல் தவறானது என அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய்யின் முக்கிய முழக்கமாக மாற்றம் வேண்டும் என்பது இந்தத் தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அஜித் இப்படிச் சொன்னதாகத் தகவல் வந்தது பரபரப்பானது. 

ஆனால், அவர் அப்படிக் கூறவில்லை என்றும் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.