ரவிக்குமார் எம்.பி. 
தமிழ் நாடு

காலம் கனியும் போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம்... ரவிக்குமார் எம்.பி. பரபரப்பு பேட்டி!

Staff Writer

"ஆட்சி அதிகாரத்தில் பங்கு 2026இல் வாய்ப்பில்லை. இரட்டை இலக்கத்தில் இடம் கிடைக்கும் என நம்புகிறோம்." என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக பொதுச்செயலாளருமான ரவிக்குமார் கூறியுள்ளார்.

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலக கூடுதல் கட்டடத்தை விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி இன்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ”2026இல் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதை தடுக்க தேர்தல் ஆணையத்தை பயன்படுத்த பாஜக நினைக்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது நாங்கள் தேர்தல் அரசியலுக்கு வந்ததிலிருந்து முன்வைத்து வரும் கருத்து. 2016இல் இதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவரையும் அழைத்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தினோம். அதற்கான காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை விசிக முன்வைக்கும். 2026இல் அதற்கான வாய்ப்பு இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் இடம் கிடைக்கும் என நம்புகிறோம்

பிரசாந்த் கிஷோருக்கு பீகாரில் என்ன நடந்ததோ அதுதான் இங்கு விஜய்க்கு நடக்கப்போகிறது. குருநாதருக்கு நடந்ததுதான் இங்கே சீடருக்கும் நடக்கப் போகிறது. ” என்றார்.