வைத்தியலிங்கம் 
தமிழ் நாடு

ஏன் திமுகவில் இணைந்தேன்..? வைத்திலிங்கம் பேட்டி

Staff Writer

திமுகவில் இணைந்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் இன்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “நான் அதிமுகவிலிருந்து விலகினாலும் அண்ணா ஆரம்பித்த தாய் கழகமான திமுகவில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். தேர்தல் சீக்கிரம் வர உள்ளது. முடிவை விரைவாக எடுக்க வேண்டும். ஓ. பன்னீர்செல்வம் காலதாமதமாக்கியதால் திமுகவில் இணைந்தேன்.

அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை. இபிஎஸ் சர்வாதிகாரமாக செயல்படுகிறார். என்னை தனிப்பட்ட முறையில் அதிமுகவில் இணைய அழைத்தார்கள். அப்படி இணைய எனக்கு விருப்பமில்லை.” என்றார்.