தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்துவருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை அடிவாரம், வத்தலக்குண்டு, கொடைரோடு ஆகிய வட்டாரங்களில் இன்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெயிலில் தவித்துவந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காற்று, மழை காரணமாக இந்தப் பகுதியில் இயல்பான போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது.
பலத்த காற்றால் விவசாயப் பகுதிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.