நடிகை குஷ்பு 
தமிழ் நாடு

சி.வி.சண்முகத்துக்கு பெண் எம்.பி.கள், குஷ்பு கண்டனம்

Staff Writer

பெண்கள் உரிமை தொடர்பான அ.தி.மு.க. போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அருவருப்பாகப் பேசியது கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்தது. 

அவரது பேச்சுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்கள் குறித்து சண்முகம் தொடர்ந்து அநாகரிகமாகப் பேசிவருவதாக அவ்வமைப்பு கண்டித்துள்ளது. 

தமிழக பா.ஜ.க. நிர்வாகி நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில், “ ஒரு பெண்ணின் அடையாளத்தை வைத்து கேலிசெய்வது அந்த நபரின் வளர்ப்பைக் காட்டுகிறது. சி.வி.சண்முகத்துக்கு குறைந்தபட்ச நாகரிகம்கூட இல்லை என்பதை அவரது பேச்சு காட்டுகிறது. நடிகை என்பதால் கண்ணியக் குறைவாகப் பேசலாமா? இப்படிப் பேசும்முன்னர் உங்கள் குடும்பத்துப் பெண்களைப் பேசுவீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.