முதல்வர் விஜய்யுடன் உலகத் திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் 
தமிழ் நாடு

உலகத் திறன் போட்டிகளில் தமிழக இளைஞர்கள் பதக்கம்- ரூ.49 லட்சம் பரிசு!

Staff Writer

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, பதக்கங்களை வென்றுள்ளனர்.

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 48ஆவது உலகத் திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் 16 முதல் 23 வயது வரை உள்ள 68 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்திய அணியின் சார்பாக பங்கேற்ற 70 நபர்களில், தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் பங்கேற்றனர்.

இந்த உலகத் திறன் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது சலாம் வெள்ளிப் பதக்கமும், ராகுல், அர்ஜூன், சுரேந்திரன், ஜாய் தாஸ் ஆகியோர் சிறப்புத் தகுதிப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

தமிழகத்தின் சார்பாக இந்தப் போட்டிகளில் பங்கேற்ற 12 பேருக்கும் மொத்தம் ரூ. 49 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

உலகத் திறன் போட்டிகள் குறித்த விவரங்களைத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் உதவி எண்கள் 9962220527, 9962220528 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டும், www.skilldevelopment.tn.gov.in/tnskills/ என்ற இணையதள முகவரியிலும் தெரிந்துகொள்ளலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram