சாலமன் பாப்பையா நேற்று காலை காலமானார்; இன்று மதியம் அவரது இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்னர்தான் அரசு மரியாதை அறிவிக்கப்படுகிறது; இந்தத் தாமதம் அவருக்கு இழைக்கப்பட்ட அவமானம் தானே என்று எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
”கடைசி நேரத்தில், இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்னர், சில காவலர்களும்; சில அலுவலர்களும் வேண்டா வெறுப்பாக அரசின் பிரதிநிதிகளாக அனுப்பி வைக்கப்படுவது நியாயமா??
இந்தக் கடைசி நேர ஒப்புக்காகச் செய்யப்படும் மரியாதையை நீங்கள் வேண்டுமானால் விசில் அடித்துக் கொண்டாடுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள் ஆனால் என்னால் இதனை ஏற்க இயலாது, கொண்டாட இயலாது.
மதுரையில் என்ன நடந்தது என்பது பற்றி எந்த அறிதலும் இல்லாமல் என் பதிவில் வந்து விளையாடும் உள்நாட்டு/ வெளிநாட்டு இணைய தற்குறிகளுக்கு என் வன்மையான கண்டனங்கள், கொஞ்சம் என்ன நடக்குதுனு தெரிஞ்சிகிட்டு கம்பு சுத்துங்கடா பக்கிகளா!!!!
அவரது குடும்பம் இதனை ஏற்கலாம், அவரது தேவாலயம் அரசுக்கு நன்றி கூறலாம்…. என்னால் இயலாது!!
விசில் அடிப்பது உங்கள் உரிமை.... ஒரு தமிழறிஞருக்கு சுயமரியாதை கோருவது எனது கடமை!!!” என்று அவர் தன் சமூக ஊடகப் பதிவில் ஆதங்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.