தமிழ் இலக்கியத்திற்கென மாநில அளவிலான சாகித்ய அகாடமி விருதை நிறுவ த.வெ.க. அரசுக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன்,கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய மொழி ஒற்றுமை மன்றம் சார்பில் வழங்கப்படும் 'மான பகதூர் சிங் லஹக்' என்ற உயரிய விருதை இந்த ஆண்டு இவர் பெற்றுள்ளார்.
இவருடைய பூனாச்சி சீனம், இத்தாலி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரது அனைத்து நாவல்களும் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டிற்கான புக்கர் விருதுக்கு இவருடைய நெடும்பட்டியலில் பூக்குழி (Pyre) நாவல் இடம்பெற்றது. இப்பட்டியலில் தமிழ் நாவல் ஒன்று இடம்பெற்றது இதுவே முதல்முறை ஆகும்.
அதே ஆண்டிற்கான ஜேசிபி இலக்கியப் பரிசை இவரது ஆளண்டாப்பட்சி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Fire bird பெற்றுள்ளது.
விருதையொட்டி நேற்று செய்தியாளர்ளிடம் பேசினார்.
அப்போது, "கடந்த காலத்தைப் போல தமிழ் எழுத்தாளர்களும், மொழி பெயர்ப்பாளர்களும் குறைந்த பயன்களை மட்டும் அடையக்கூடாது; அவர்களுக்கு தேவையான முழு ஆதரவையும் அளித்து நம் தமிழ் இலக்கியங்கள் பலரைச் சென்றடைய உதவ வேண்டும். தேசிய சாகித்ய அகாடமி விருது, உலகில் உள்ள எழுத்தாளர்களை கவுரவித்து வருகிறது. அதேபோல், தமிழ்க் குரல்களை அங்கீகரிக்க மாநில அளவிலான சாகித்ய அகாடமி விருதை நிறுவ வேண்டும்.” என்று பெருமாள் முருகன் கூறினார்.