தமிழ் நாடு

அமைச்சர் முன்பு மண்டியிட்டு மனு தந்த இளைஞர்... நெட்டித் தள்ளிய போலீஸ்!

Staff Writer

ஈரோடு புத்தகக்காட்சியில் அமைச்சர் ராஜ்மோகன் முன்பாக திடீரென இளைஞர் ஒருவர் மண்டியிட்டு மனு அளித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் அவர் அப்படி மனுவைக் கொடுக்க முயன்றபோது, முதலில் இப்படிச் செய்யாதீர்கள் என அவரை எழுந்திருக்க வைத்தார்.

அந்த இளைஞர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ். தங்கள் பகுதியில் பட்டியலினக் குழந்தைகள் கல்வி கற்பதற்குத் தடையாக உள்ள தீண்டாமைச் சுவரை அகற்றவேண்டும் என அவர் தன் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதை வாங்கிக்கொண்ட அமைச்சர், "இதில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீங்கள் என்னைப் பற்றித் தவறாக வீடியோ வெளியிட்டிருக்கிறீர்கள். ஆனாலும், இந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் தருகிறேன். உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கிறேன்" என்று கூறினார்.

உடனே அந்த இளைஞரை அங்கிருந்த போலீஸ்காரர்கள் நெட்டித் தள்ளி பின்னால் கொண்டுபோனார்கள்.