மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் ஆதரவில் அகில இந்திய மக்கள் இயக்கத்தின் சென்னையில் இன்று ஜீரோ பிஜேபி இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் பன்முகத் தன்மை, கூட்டாட்சித் தத்துவம், அரசமைப்புச்ச்சட்டம் ஆகியவற்றைச் சிதைக்கும் பா.ஜ.க.வின் செயல்பாடுகளை முறியடிக்க, தமிழகத்தில் அக்கட்சி போட்டியிடும் அனைத்து இடங்களிலும் அவர்களைத் தோற்கடித்து பா.ஜ.க. இல்லாத சட்டப்பேரவையை உருவாக்குவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம் என்று நீதிபதி அரி பரந்தாமன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
”சிறப்பு வாக்காளர் திருத்தம் எனும் மத்திய அரசின் நடவடிக்கையால் பல கோடி மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்குத்திருட்டு மூலம்தான் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்திலும் வாக்கு சதவீதத்தை உயர்த்தி வாக்குகள் திருடப்படும் அபாயம் உள்ளது. மக்களும் அரசியல் கட்சிகளும் விழிப்பாக இருக்கவேண்டும்.” என்றும் நீதிபதி அரி, பரகலா பிரபாகர், அகில இந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் தாமஸ் பிராங்கோ ஆகியோர் கூறினர்.