தமிழ் நாடு

அண்ணாவின் பெயரை இருட்டடிப்பு செய்வதா?- எடப்பாடி கண்டனம்

Staff Writer

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அண்ணாவின் பெயரில் பேருந்துநிலையத்தின் பெயரில் அண்ணாவை எடுத்துவிட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரைச் சூட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

அங்கு ஏற்கெனவே இருக்கும் பேருந்துநிலையத்துக்கு அண்ணாவின் பெயர் இருக்கும்நிலையில், புதியதாகப் பேருந்துநிலையம் கட்டி அதற்கு கருணாநிதியின் பெயரைச் சூட்டியுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

அண்ணாவின் பெயரைப் புறக்கணிப்பதுதான் திராவிட மாடலா என்றும் அவர் கேட்டுள்ளார்.

இதேபோல, திருவள்ளூர் நகராட்சியிலும் குடிநீர், கழிப்பிட வசதி இல்லாமல், புதிய பேருந்துநிலையத்தை தேர்தலுக்காக அவசரம் அவசரமாகத் திறப்பதும் கண்டிக்கத்தக்கது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.