முதலமைச்சர் விஜய்யின் வருகையை முன்னிட்டு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஈரோடு மண்டல இணைச் செயலாளர் துரை சேனாபதியைக் கைதுசெய்திருப்பதாக அக்கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”ரீல்ஸ் முதல்வர் வருகைக்காக “முன்னெச்சரிக்கை” என்ற பெயரில் அவரை இன்றைய த.வெ.க. அரசின் காவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சிதான் மாறி இருக்கிறதே தவிர, ஆட்சியாளர்கள் அ.தி.மு.க. ஐடி விங் நிர்வாகிகளைக் கண்டு அஞ்சும் காட்சிகள் கொஞ்சம் கூட மாறவில்லை.
முதல்வர் வாகனத்தின் முன் வானரங்கள் போல் பாயும் ஆளுங்கட்சி ஆச்சரியக்குறிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் காவல்துறை, இணையத்தில் செயல்படும் அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி மீது “முன்னெச்சரிக்கை” என்ற பெயரில் இப்படி ஒரு அராஜகப் போக்கை கையாண்டு இருப்பது, இந்த ஆட்சியின் நிர்வாக லட்சணத்தை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.
உடனடியாக துரை சேனாபதியை விடுதலை செய்ய வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.” என்று அ.தி.மு.க. ஐடி விங் வலியுறுத்தியுள்ளது.