தீக்குளித்த அ.தி.மு.க. நிர்வாகி 
தமிழ் நாடு

அ.தி.மு.க. நிர்வாகி தீக்குளித்து தற்கொலை!

Staff Writer

கட்சிக்குள் இருக்கும் பிளவுகளைக் கடந்து ஒன்றாகுமாறு கோரி அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். 

தஞ்சை மாவட்டத்தில் இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தஞ்சை மாவட்ட வர்த்தகர் அணி இணைச்செயலாளரான திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

இவரின் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சார்பில் மகேந்திரனின் குடும்பத்துக்கு 44 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.