புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி- அ.தி.மு.க. நிர்வாகிகள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி- அ.தி.மு.க. நிர்வாகிகள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு  
தமிழ் நாடு

அ.தி.மு.க.- புதிய தமிழகம் கூட்டணிப் பேச்சு!

Staff Writer

அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பகிரங்கப் பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. 

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியை, அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, jஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் சற்றுமுன் சந்தித்தனர். 

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வி.கே. அய்யர் முதலிய நிர்வாகிகள் உடனிருந்தனர். 

கடந்த வாரம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பு.த.தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். 

இந்தக் கூட்டணி உறுதியானால்,தென்காசி மக்களவைத் தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்படும். அங்கு கிருஷ்ணசாமி போட்டியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும் விரைவில் சமுகமாக உடன்பாடு ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து முடிவெடுப்பார் என்று வேலுமணி கூறினார்.