தமிழ் நாடு

அ.தி.மு.க. வழக்கு - எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி!

Staff Writer

ஜெயலலிதாவுக்கு அடுத்து சசிகலா அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் சிறைக்குச் சென்றபிறகு எடப்பாடி பழனிசாமி 2022ஆம் ஆண்டில் பொதுச்செயலாளராக ஆக்கப்பட்டார். ஆனால் அது கட்சியின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது என திண்டுக்கல் சூரியமூர்த்தி சென்னை, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

அதை எதிர்த்து பழனிசாமி தரப்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களால் பொதுச்செயலாளரால் தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்று சூரியமூர்த்தி கூறியிருந்தார். 

இந்நிலையில், இன்று உரிமையியல் நீதிமன்றத்தில் பழனிசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. 

இதனால் அவரது தரப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.