இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொழில் துறையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதைக் கருத்தில்கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.