பார்த்தசாரதி கோயில் முன்பாக செய்தியாளர்கள் புறக்கணிப்புப் போராட்டம் 
தமிழ் நாடு

அமைச்சர் சேகர்பாபு அவமரியாதைப் பேச்சு- செய்தியாளர்கள் புறக்கணிப்புப் போராட்டம்

Staff Writer

அரசு நிகழ்ச்சியில் இன்று செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தவரை சமயத் துறை அமைச்சர் சேகர் பாபு அவமரியாதையாகப் பேசியுள்ளார். சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதைக் கண்டித்து செய்திப் பதிவாக்க வந்த ஊடகத்தினர் அனைவரும் தொலைக்காட்சி கேமராக்களை நடுத்தெருவில் போட்டு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீர் சம்பவத்தால் என்ன செய்வதெனப் புரியாமல் அதிகாரிகள் கையைப் பிசைந்தபடி நின்றனர். 

இந்த சம்பவத்துக்கு சென்னைப் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.