அன்பில் மகேஸ் விருப்ப மனு 
தமிழ் நாடு

அமைச்சர்களின் விருப்ப மனு அட்டகாசம்!

Staff Writer

தி.மு.க.வில் விருப்பமனுத் தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வரிசையாக மனுத்தாக்கல் செய்வதில் இறங்கியுள்ளனர்.

இதில் சிலர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மனுத்தாக்கல் செய்ய வருகின்றனர்.  இதன் மூலம் கட்சித் தலைமையை ஈர்க்கிறார்களோ இல்லையோ பொதுமக்களின் கவனத்தைப் பெற்றுவிடுகிறார்கள். 

கடந்த வாரம், தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் பழ. செல்வகுமார், சென்னை, இராயபுரம் தொகுதிக்கு மனுத்தாக்கல் செய்ய இளைஞர் படையோடு வந்திருந்தார். அப்போது, அண்ணா சாலையில் பெரிய படகு ஒன்றை லாரியில் கட்டி இழுத்துவந்து அண்ணா சாலையையே திணறச்செய்தார். 

அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் இன்று தன்னுடைய மனுவைத் தாக்கல்செய்தார்.  

அவரைப் போல, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேசும் இன்று தன்னுடைய திருச்சி, திருவெறும்பூர் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தார். இதையொட்டி காலை 9.30 மணி முதல் அந்த வட்டாரத்தையே அவரின் ஆதரவாளர்கள் திணறடித்துவிட்டார்கள். இதனால் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தெற்கிலிருந்து பாரிமுனை நோக்கி அலுவலகம், மருத்துவமனைகள், நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டியவர்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.