உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ரூ.2 கோடி செலவில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை, அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டைத் தொடங்கிவைத்த அவர் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார்.
விழாக் குழுவினருக்கு அவர் சிறப்புச் செய்தார்.
முன்னதாக, முதல் அறிவிப்பாக, பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் அரசுப் பணி வழங்க வழிவகை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தன் அறிவிப்பால் மகிழ்ச்சிதானே எனக் கேட்டவர், தமிழர்களாக வெல்வோம் ஒன்றாக என தன் நறுக்குரையை முதலமைச்சர் முடித்துக்கொண்டார்.
முதல் சில சுற்றுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அவர் பரிசுகளையும் வழங்கினார்.