ராமேஸ்வர முருகன் 
தமிழ் நாடு

ஆசிரியர் தேர்வு வாரியச் செயலாளர் ராமேஸ்வரமுருகன் மீது இலஞ்ச வழக்கு!

Staff Writer

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் ராமேஸ்வரமுருகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார் என்று இலஞ்ச வழக்கு பதியப்பட்டுள்ளது. 2012-16 காலகட்டத்தில் அவர் பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநராக இருந்தபோது முறைகேடாக வருவாய் ஈட்டினார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஊழல் தடுப்பு காவல்துறை அவருடைய வீட்டில் தேடுதல் சோதனையில் ஈடுபட்டது. அதன்படி, அவர் மீதும் அவரின் மனைவி, தந்தை, தாய், மாமனார் ஆகியோர் மீது 3 கோடியே 89 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் சொத்து குவித்தனர் என்று ஊழல் தடுப்பு காவல்துறை இன்று வழக்கு பதிந்துள்ளது.