தமிழ் நாடு

ஆட்சியில் பங்கு- இடைவிடாது குடைச்சல் தரும் காங்கிரஸ் எம்.பி.!

Staff Writer

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசுவதற்காக எல்லா கட்சிகளுக்கும் முந்திக்கொண்டு குழு அமைத்தது, காங்கிரஸ் கட்சி. ஆனால், கூட்டணித் தலைமையான காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை.

இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையைத் தவிர, மற்ற பல பிரமுகர்களும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என தொடர்ந்து பேசிவருகின்றனர். குறிப்பாக, மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இந்தக் கருத்தை அடிக்கடி வலியுறுத்திவருகிறார்.

இந்நிலையில், சற்று முன்னர், அவர் தன் சமூக ஊடகப் பக்கத்தில் மீண்டும் இது குறித்து கட்சித் தலைமையிடம் பேசப்போவதாகவும் அதற்காக புதுதில்லிக்குச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவு :

”இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன்.எனக்காக அல்ல..என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்கார்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதாற்காக ..அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்..இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல ..நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல..மதவெறி கும்மல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல.நட்புக்கு தோழ் கொடுப்போம்.உரிமைக்கு குரல் கொடுப்போம் .#ஆட்சியில்பங்கு.”

மாநில காங்கிரஸ் தலைவர் இதுகுறித்து இரு கட்சிகளின் தலைவர்களுமே பேசித் தீர்மானிப்பார்கள் எனக் கூறியபோதும், மாணிக்கம் தாகூர் அதைப் பொருட்டாகவே கருதாமல் தொடர்ந்து கூட்டணி ஆட்சி குறித்து கருத்து தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.